/* */

ஒரு எஸ்.எம்.எஸ். போதும்... கோவையில் வீடுதேடி வரும் மளிகைப்பொருட்கள்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில், குறுஞ்செய்தி அனுப்பினால், வீட்டிற்கே மளிகை பொருட்கள் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

HIGHLIGHTS

ஒரு எஸ்.எம்.எஸ். போதும்... கோவையில் வீடுதேடி வரும் மளிகைப்பொருட்கள்
X

கோவை மாவட்டம் சூலூர் கருமத்தம்பட்டி திமுக சார்பில், எஸ்.எம்.எஸ். அனுப்பினால் வீடுதேடி அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே, கருமத்தம்பட்டியில், திமுக சார்பில் அரசு அனுமதி பெற்ற 25 வாகனங்களின் மூலம் காய்கறி விற்பனை கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது,

இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு தேவையான மலிவு விலையில் முட்டை, மலிவு விலையில் ரொட்டி ஆகிய பொருள்கள் விற்பனையை, கோவை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மருதமலை சேனாதிபதி ஏற்பாட்டில் செய்யப்பட்டுள்ளது. சூலூர் திமுக கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆகியோர், இச்சேவையை இன்று துவக்கி வைத்தனர்.

இது குறித்து, சூலூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நித்தியா மனோகரன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் நோய்த்தொற்று அதிகம் உள்ளது. குறிப்பாக சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிக அதிகமாக உள்ளது.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி அத்தியாவசிய தேவைகளான காய்கறி மற்றும் முட்டை, ரொட்டி ஆகிய பொருட்களை பொதுமக்கள் தேவைப்படும் பட்சத்தில் அலைபேசி எண்ணில் குறுஞ்செய்தி அனுப்பினால் ,அவர்கள் வீட்டிற்கே வந்து தருவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

நாளை முதல் பொதுமக்களுக்குத் தேவையான மளிகை பொருட்களும் தருவது குறித்து, ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து முதல் கட்டமாக ஐந்து வாகனங்களில் அரசு அனுமதி பெற்று, மலிவு விலையில் மளிகை பொருட்கள் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் விற்பனை செய்வோம் என்றார்.

Updated On: 31 May 2021 3:55 PM GMT

Related News