கோவையில் திமுகவிற்கு எதிராக கூட்டணி அமைத்த திமுக கூட்டணிக் கட்சிகள்

கோவையில் திமுகவிற்கு எதிராக கூட்டணி அமைத்த திமுக கூட்டணிக் கட்சிகள்
X

கண்ணம்பாளையம் (பைல் படம்)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் தனியாக கூட்டணி அமைத்துள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கண்ணம்பாளையம் பேரூராட்சியில் திமுகவிற்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகள் தனிக் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளன. கண்ணம்பாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் தனியாக கூட்டணி அமைத்துள்ளன. அக்கூட்டணிக்கு கண்ணம்பாளையம் மக்கள் சேவை முன்னணி எனப் பெயரிட்டுள்ளது. திமுகவிற்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகள் தனி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளனர். இப்பேரூராட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக போதிய இடங்களை ஒதுக்காததால், மக்கள் சேவை முன்னணி என்ற கூட்டமைப்பை உருவாக்கி தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக அக்கூட்டணியினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி