கோவையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 700 ஆக உயர்வு - ஆட்சியர் நாகராஜன் பேட்டி
![கோவையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 700 ஆக உயர்வு - ஆட்சியர் நாகராஜன் பேட்டி கோவையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 700 ஆக உயர்வு - ஆட்சியர் நாகராஜன் பேட்டி](https://www.nativenews.in/h-upload/2021/05/26/1072682-img20210526155839.webp)
கோவை ஒண்டிபுதூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் நாகராஜன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 3 ஆயிரத்து 100 படுக்கைகள் வசதிகளுடன் சுமார் 12 முதல் 15 வரை கொரோனா சிகிச்சை மையங்கள் அரசு மூலம் இயங்கி வருகிறது. அந்தந்த கிராம ஊராட்சி அளவிலும் ஊரக பகுதிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட துவங்கியுள்ளது. கூடுதலாக முழுக்க முழுக்க தனியார் பங்களிப்புடன் கோவை மாநகர பகுதிகளிலும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஊரடங்கில் தொற்று பரவல் பெருமளவில் குறைக்கப்படும். இந்த ஊரடங்கின் முழு பயன் அடுத்த ஒரு சில நாட்களில் தெரியவரும். பொதுமக்களும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, ஊரடங்கை கடைபிடித்தல் ஆகியவற்றை பின்பற்றும் போது தொற்று பரவல் தடைப்படும். மாவட்டம் முழுதும் 700 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில், ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் பாதிக்காதவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின்றி கிடைத்து வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை மூலம் ஏற்பாடு செய்யப்படும் என அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu