முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது காவல் நிலையத்தில் புகார்

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது காவல் நிலையத்தில் புகார்
X

காவல் நிலையத்தில் திமுக புகார்

கலெக்டரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம் செய்ததாக கூறப்படும் நிலையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் சமீரனை, ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர். மனுவினை பெறும் போது, மாவட்ட ஆட்சியர் எழுந்து நின்று வாங்கவில்லை எனக்கூறி, மனு கொடுக்கச் சென்ற அதிமுகவினர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம் செய்தனர். இது தொலைக்காட்சிகளில் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சித்தலைவரை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சூலூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், இன்று சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தளபதி முருகேசன் தலைமையில் அளித்த மனுவில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!