4 கோடி மதிப்பு மெத்தாபெதமின் போதை பொருள் கடத்தல்: வெளிநாட்டு பெண் கைது
கோவை விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண்ணிடம் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்
ரூ. 4 கோடி மதிப்பு மெத்தா பெதமின் போதை பொருள் திரைப்பட பாணியில் கடத்திய வெளிநாட்டுப் பெண் கைது செய்யப்பட்டார். விமான நிலையத்தில் ஸ்கேனில் சிக்கிய உகாண்டா பெண்ணை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
வளைகுடா நாடான சார்ஜா-கோவை இடையே ஏர் அரேபியா விமான இயக்கப்படுகிறது. சான்ரா நாண்டேசா விமானம் மூலமாக 6 தேதி சார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்தார். விமானத்தில் வந்த பயணிகளை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உகாண்டா நாட்டில் இருந்து வந்த உகாண்டா பெண்ணின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் பின்னாலடை தொழில் துறையினரை சந்திக்க வந்ததாக தெரிவித்துள்ளார் . சுங்கத்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு அந்த பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லவே சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று துருவி துருவி விசாரித்தபோது அந்த பெண்ணின் வயிற்றில் ஏதோ மர்ம பொருள் போதை பொருள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அப்பெண்ணை ஸ்கேனுக்கு அதிகாரிகள் உட்படுத்தினர். அந்த பெண் போதை பொருளை மாத்திரை கேப்சூலில் அடைத்து அதனை விழுங்கியது ஸ்கேனில் தெரியவந்தது. இதனையடுத்து உகாண்டா நாட்டு பெண்ணை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு இனிமா தந்து வயிற்றிலிருந்த கழிவுகளை வெளியேற்றினர். மருத்துவ கண்காணிப்பில் வைத்து அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
பெண்ணின் வயிற்றில் இருந்த கொஞ்சம் கொஞ்சமாக பெண் வயிற்றில் வைத்து கடத்தி வந்த பொருள் வெளியேறியது. 81 கேப்சூல்களை அதிகாரிகள் எடுத்து ஆய்வுக்காக அனுப்பியதில் அது போதை பொருள் MERTHA MPHETAMINE மெத்த்பேட்டைமன் போதை மருந்து இதன் மதிப்பு 4 கோடி இந்த போதை பொருள் எங்கிருந்து யாருக்காக கடத்தப்பட்டது என்று விசாரணை நடந்து வருகின்றனர். இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் உகாண்டா பெண்ணை கைது செய்துகோவை போதை பொருள் தடுப்பு சட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டார். வழக்கை விசாரித்த நீதி லோகேஷ்வரன் 23-05-2022 வரை நீதி மன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu