பிரதமர் மோடி கோவை வருகை: எல்.முருகன்

தமிழக பா.ஜ.க அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நேற்று பிரதமர் சென்னை வந்த போது பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது என தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட சாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளளர் என்ற பெயரிடப்பட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என பிரதமர் உறுதியளித்து இருக்கின்றார் என தெரிவித்தார். பா.ஜ.க சார்பில் மதுரையில் நடந்த தாமரை சங்கமம் மாநாட்டில் இருந்து இதை தேவேந்திர குல வேளாளர் பெயர் திருத்தம் என்ற கோரிக்கையினை ஆதரித்து வருகின்றோம் என தெரிவித்த அவர், தற்போது தேவேந்திர குல மக்களின் அங்கீகாரம் மீட்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தல் பணிகள் திட்டமிட்டு நடைபெற்று வருகின்றது எனவும், கொங்கு மண்டலத்தில் 12 மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் இன்றைய கூட்டத்தில் கலந்து இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார். மேலும் வரும் 25 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கோவைக்கு வருகின்றார் எனவும் பிரமாண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெறுகின்றது எனவும் தெரிவித்தார்.
அரசு விழா நிகழ்வு ஓன்றிலும் பொது கூட்டத்திலும் என 2 நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கின்றார் என தெரிவித்தார். பா.ஜ.க அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், கூடிய சீக்கிரம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் கூறிய அவர், இரட்டை இலக்கத்தில் பா.ஜ.க உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருப்பார்கள் எனத் தெரிவித்தார்.
நாங்கள் எல்லா அரசியல் கட்சிகளையும் வேலை தூக்க வைத்திருக்கின்றோம் எனவும், பெட்ரோல் , டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு விலைவாசி கட்டுக்குள் இருக்கின்றது எனவும் எல்.முருகன் தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu