முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதரன் மறைவு

முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதரன் மறைவு
X

கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதரன் உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதரன் கோவையிலுள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த வாரம் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்ட நிலையில், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தார்.

72 வயதான ப.வெ.தாமோதரன் கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகேயுள்ள பச்சார்பாளையம் பகுதியை சேர்ந்தவர். கடந்த 2001 ம் ஆண்டு பொங்கலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003 முதல் 2006 ம் ஆண்டு வரை கால்நடைத் துறை அமைச்சராக பதவி வகித்தார். 2012 முதல் 2017 வரை ஆவின் சேர்மனாகவும், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்