'உதான்' திட்டத்தில் மீண்டும் சூலூர் விமான நிலையம்

சூலூர் விமான நிலையம்
உதான் (UDAN - Ude Desh ka Aam Naagrik, UDAN-என்பது இந்திய அரசின் வட்டார விமான நிலையங்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்குமானத் திட்டமாகும். இதன்மூலம் விமான பயணம் பரவலாகவும் அனைவரும் பயணம் செய்யத் தக்கதாகவும் இருக்கும்.
விமானப் பயணத்தைச் சந்தை அடிப்படையிலான வழிமுறை மூலம் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்படும் உலகளாவிய ரீதியில் முதன்மையானது உதான் திட்டம்
மத்திய அரசு, நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விமான சேவையை விரிவு படுத்தும் நோக்கத்துடன், 'உதான்' திட்டத்தை 2016 முதல் செயல்படுத்தி வருகிறது. அனைவருக்கும் ஏற்ற வகையில் விமான சேவை வழங்கி, அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கம்.
விமான சேவை இல்லாத, தொலைதுார பகுதிகளுக்கு விமானம் இயக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகளை மத்திய அரசு வழங்குகிறது. பயன்படுத்தப்படாமல் இருக்கும் விமான நிலையங்களுக்கு, இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உதான், 1.0 திட்டம், 2016ல் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தில், தமிழகத்தில் அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், நெய்வேலி, ராமநாதபுரம், சூலூர், உளுந்தூர்ர்பேட்டை, வேலூர் விமான நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விமான சேவை இல்லாத விமான நிலையங்கள் என்ற பட்டியலில் இவை இடம் பெற்றுள்ளன. குறைந்த விமான சேவை கொண்ட விமான நிலையம் என்ற பட்டியலில் சேலம் விமான நிலையமும் இடம் பெற்றுள்ளது.
இந்திய விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள சூலுார் விமான நிலையத்தில் விமானப்படை தளமும், போர் விமானங்கள் பழுது நீக்கும் மையமும் இந்த தளத்தில் செயல்படுகிறது
1940ல் பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்த விமானப்படை தளம், தென்னிந்தியாவில் அமைந்துள்ள விமானப்படை தளங்களில் முதன்மையானது. தேஜஸ் போர் விமானங்கள், சாரங், துருவ் ஹெலிகாப்டர்கள் இந்த தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன
இது, சிறிய அளவிலான விமானங்கள் வந்து செல்வதற்கு ஏற்றது. குடியரசுத்தலைவர், பிரதமர் போன்ற வி.வி.ஐ.பி.,க்கள் தனி விமானத்தில் வந்து செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கு முன் நான்கு முறை, 'உதான்' திட்டத்தில் சூலுார் விமான நிலையம் அறிவிக்கப்பட்ட போதும், எந்த நிறுவனமும் செயல்படுத்த முன் வரவில்லை. தொடர்ந்து ஐந்தாம் முறையாக மத்திய அரசு சூலுார் விமான நிலையத்தை 'உதான்' பட்டியலில் அறிவித்துள்ளது
சூலுார் விமான நிலையத்துக்கு விமானம் இயக்க, ஏதேனும் விமான நிறுவனங்கள் முன் வரும் பட்சத்தில், பாதுகாப்புத்துறை அது பற்றி பரிசீலிக்கும். பாதுகாப்புத்துறை அனுமதி கிடைக்கும் பட்சத்தில், கோவையின் இரண்டாம் விமான நிலையமாக சூலுார் செயல்பட வாய்ப்புள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu