டி.என்.பி.எஸ்.சி புள்ளியியல் தேர்வு : கோவையில் 1,415 பேர் எழுதினர்

டி.என்.பி.எஸ்.சி புள்ளியியல் தேர்வு : கோவையில் 1,415 பேர் எழுதினர்
X
தமிழ்நாடு ஒருங்கிணைந்த புள்ளியியல் சார் நிலை பணிகளுக்கான தேர்வில் கோவையில் 1,415 பேர் தேர்வு எழுதினர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என். பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-3 ஏ பதவிக்கான எழுத்து தேர்வு தமிழகத்தில் நேற்று நடந்தது.

தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு ஒருங்கிணைந்த புள்ளியியல் சார் நிலை பணிகளில் புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவியில் 211 பேர், கணக்காளர்- 5, புள்ளியியல் தொகுப்பாளர் ஒருவர் என மொத்தம் 217 காலி பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று 15 மாவட்டங்களில் நடைபெற்றது.

இதற்கான தேர்வு மையங்கள் கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்தன. கோவையில் 10 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

தேர்வு எழுதுவதற்காக தேர்வர்கள் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வர தொடங்கினர். பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு எழுதும் அறைக்கு சென்றனர். முன்னதாக அவர்களது நுழைவு சீட்டை அதிகாரிகள் சரி பார்த்தனர். இதில் ஹால் டிக்கெட், அடையாள அட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையங்களுக்கு வராதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு மையத்தில் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் தேர்வு மையங்களில் வீடியோ மூலமும் தேர்வு கண்காணிக்கப்பட்டது. இந்த தேர்வு காலை, பிற்பகல் என 2 கட்டமாக நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை தேர்வு நடந்தது. பிற்பகலில் 2.30 மணி முதல் 5.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

கோவையில் 2831 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 1,415 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 1,416 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்