பில்லூா் 3 குடிநீா்த் திட்டப்பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தல்

பில்லூா் 3 குடிநீா்த் திட்டப்பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தல்
X

பில்லூா் 3 குடிநீா்த் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் 

பில்லூா் 3 குடிநீா்த் திட்டம் ஜூன் மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்தும் விதமாகப் பணிகளை துரிதமாக முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்

கோவை மாநகராட்சிக்கு குடிநீா் வழங்கும் விதமாக ரூ.779 கோடி மதிப்பில் தொடங்கப்படும் பில்லூா் 3 திட்டத்துக்காக மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை, மருதூா் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம் மற்றும் கட்டன்மலை ஆகிய இடங்களில் கட்டுமானம் மற்றும் குடிநீா்க் குழாய்கள் பதித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை தமிழ்நாடு மின்நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழக தலைவா் அம்பலவாணன், மாநகராட்சி ஆணையா் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, ஜூன் இரண்டாம் வாரத்துக்குள் சோதனை ஓட்டம் மேற்கொள்ளும் விதத்தில் பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை பகுதிகளில் ரூ.134 கோடி மதிப்பீட்டில் தலைமை நீரேற்று நிலையம் கட்டுமானப் பணி தற்போது 95 சதவீதமும், மின்சார இணைப்புப் பணிகள் 80 சதவீதமும் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகளை வேகமாக முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

மருதூா் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம் பகுதியில் ரூ.104.90 கோடி மதிப்பில் 17 கோடி ( 178 எம்.எல்.டி) குடிநீா் சுத்திகரிப்பு நிலைய வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கட்டன்மலை பகுதியில் ரூ.62 கோடி மதிப்பில் 900 மீட்டா் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேமம்பாட்டு கழக பொது மேலாளா் முருகன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளா் செல்லமுத்து, உதவி செயற்பொறியாளா்கள் செந்தில்குமார், பாலமுருகன், உதவிப் பொறியாளா் சாம்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.

Tags

Next Story
இரவு உணவுக்குப் பின் உடல் எடை குறைக்க இந்த 5 செயல்களை தினமும் செய்யுங்கள்!