கோவை - மதுரை விரைவு ரயில் வேகம் அதிகரிப்பு
Pollachi Railway News
கோவை - மதுரை விரைவு ரயில் இயக்கப்படும் வேகம் 100 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது .
இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கோவை - பொள்ளாச்சி- பழநி - திண்டுக்கல் வழித்தடத்தில் பயணிகள் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் வேகத்தை அதிகரிக்குமாறு, பயணிகள் தரப்பில் தொடா்ந்து விடுக்கப்பட்ட கோரிக்கை காரணமாக, ரயிலின் வேகம் திண்டுக்கல் - பழநி இடையே மணிக்கு 75 கி மீ வேகத்தில் இருந்து 100 கிமீயாகவும் பழநி - பொள்ளாச்சி இடையே மணிக்கு 70 கிமீ வேகத்தில் இருந்து 100 கிமீ யாகவும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, முன்பு மதுரையில் தினமும் காலை 7.25 மணிக்குப் புறப்பட்டு, பிற்பகல் 12.45 மணிக்கு கோவையைச் சென்றடையும்
மதுரை - கோவை விரைவு ரயில் (எண்:16722), மதுரையில் தற்போது காலை 7.25 மணிக்குப் புறப்பட்டு 30 நிமிடங்கள் முன்பாகவே பிற்பகல் 12.15 மணிக்கு கோவை நிலையத்தைச் சென்றடையும்.
அதேபோல, கோவையில் பிற்பகல் 2.05 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு மதுரைக்குச் சென்றடையும்
கோவை - மதுரை விரைவு ரயில் (எண்: 16721), கோவையில் இருந்து 35 நிமிடங்கள் தாமதமாக 2.40 மணிக்குப் புறப்பட்டு வழக்கமாகச் சென்றடையும் 7.35 மணிக்கு மதுரையைச் சென்றடையும்.
இந்த ரயில் வழக்கமாக நின்று செல்லும் போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூா், பழநி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல், அம்பத்துரை, கொடைக்கானல் சாலை, வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூா், கூடல் நகா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும் கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - மங்களூரு விரைவு ரயில் ( எண்:16159) டிசம்பா் 24 ஆம் தேதி முதல் ஒரு கூடுதல் படுக்கை வசதி பெட்டியுடன் இயக்கப்படும்.
காரைக்கால் - எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 16187) ஒரு கூடுதல் படுக்கை வசதி பெட்டியுடனும், மங்களூரு - கோவை விரைவு ரயில் (எண்: 16324) இரு இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடனும் டிசம்பா் 25 ஆம் தேதி முதல் இயக்கப்படும்.
மங்களூரு - சென்னை விரைவு ரயில் (எண்: 16160) ஒரு கூடுதல் படுக்கை வசதி பெட்டியுடனும், கோவை - மங்களூரு விரைவு ரயில் (எண்: 16323) இரு இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடனும் டிசம்பா் 26 ஆம் தேதி முதல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu