விடுமுறை தின சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

விடுமுறை தின சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
X

பைல் படம்.

மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி,

திருவனந்தபுரம்- சென்னை எழும்பூர் ரயில்(வண்டி எண்: 06044) வரும் 5 மற்றும் 12 ஆகிய இரு தினங்கள், திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இரவு 7:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர்- திருவனந்தபுரம் ரயில் (வண்டி எண்: 06043) வரும் 6 மற்றும் 13 ஆகிய இரு தினங்கள், சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் மதியம் 2:25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:45 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில்நிலையம் சென்றடையும்.

இந்த ரயிலானது அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் உள்ளிட்ட ரயில்நிலையத்தில் நின்று செல்லும்.

எர்ணாகுளம்- சென்னை எழும்பூர் ரயில் (வண்டி எண்: 06046) வரும் 9 மற்றும் 16ம் தேதி, எர்ணாகுளம் ரயில்நிலையத்தில் இரவு 11:20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:05 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர்-- எர்ணாகுளம் ரயில் (வண்டி எண்: 06045) வரும் 10 மற்றும் 17ம் தேதி, சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் மதியம் 2:25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3:10 மணிக்கு எர்ணாகுளம் ரயில்நிலையம் சென்றடையும்.

இந்த ரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரயில்நிலையத்தில் நின்று செல்லும்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil