கோவையில் இயந்திர கோளாறு இரண்டு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது கரும்புக்கடை தனியார் பள்ளியில் வாக்கு இயந்திரம் பழுதடைந்ததால் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் கிரசன்ட் என்ற தனியார் பள்ளியில் வாக்கு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு மையத்தில் உள்ள 281ம் எண் வாக்கு சாவடியில் இன்று காலை வழக்கம் போல வாக்குப்பதிவு துவங்கியது.
63 பேர் வாக்களித்து இருந்த நிலையில் திடீரென வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அமமுக கட்சியின் குக்கர் சின்னம் பதிவாகாமல் இருந்ததால் வாக்குப்பதிவானது நிறுத்தப்பட்டது.
இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் காலை 9.30 மணி வரை மாற்று வாக்கு பதிவு இயந்திரம் கொண்டு வரபடவில்லை.இதன் காரணமாக அங்கிருந்த வாக்காளர்கள் அதிருப்தி அடைந்து அங்கிருந்த வாக்குச் சாவடி அலுவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
இரண்டு மணி நேரமாக காத்திருந்ததால் வாக்களிக்க வந்திருந்தவர்கள் வாக்களிக்காமல் திரும்பி சென்று விட்டதாகவும் வீட்டில் குழந்தைகள் பெரியவர்கள் இருப்பதால் நீண்ட நேரம் வாக்குசாவடியில் நிற்க முடியாது சூழலில் பலர் ஓட்டு போடமல் திரும்பி சென்று விட்டதாக கூறினர்.
இந்நிலையில் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மாற்று வாக்கு பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டது. பின்னர் புதிய வாக்கு பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி சரி பார்க்கபட்ட பின்னர் காலை 10 மணிக்கு மேல் பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இரண்டு மணி நேரம் காலதாமதமாக தொடங்கியதன் காரணமாக இந்த சாவடியில் வாக்குப்பதிவு நேரத்தை இரவு 9 மணி வரை நீட்டித்து வழங்க வேண்டும் என்று வாக்குசாவடி மையத்தில் இருந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu