கோவையில் தொற்று அதிகரிப்பு: புதிதாக 235 பேருக்கு கொரோனா

கோவையில்  தொற்று அதிகரிப்பு: புதிதாக 235 பேருக்கு கொரோனா
X
கோவை மாவட்டத்தில், நேற்றைய தினத்தை விட இன்று கூடுதலாக 11 பேருக்கு என, மொத்தம் 235 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த ஒரு மாத காலமாக தினசரி கொரோனா பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 11 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 235 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.

இதன் மூலம், கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை, இரண்டு லட்சத்து 38 ஆயிரத்து 325 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் குறையத் துவங்கியுள்ளது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 226 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 33 ஆயிரத்து 860 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 5 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2293 ஆக உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்