மேற்கூரை இடிந்து விழுந்து பெண்ணிற்கு லேசான காயம் : அதிர்ஷ்டவசமாக தப்பினார்

மேற்கூரை இடிந்து விழுந்து பெண்ணிற்கு லேசான காயம் : அதிர்ஷ்டவசமாக தப்பினார்
X

கூரை இடிந்து விழுந்ததில் சிதறிக்கிடக்கும் கட்டுமான பொருட்கள்.

கோவையில் வீட்டுவசதி வாரிய பழைய கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண்ணிற்கு லேசான காயம் ஏற்பட்டது.

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தைக்கு பின்புறம் தமிழக அரசுக்குச் சொந்தமான குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. மொத்தம் 960 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிய காரணத்தினால் உறுதி தன்மையற்று காணப்படுகிறது.

மேலும் இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள இரண்டு பிளாக்குகள் முற்றிலும் மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மாறிவிட்டது. இதனால், அங்கு வசித்து வந்த பல பேர் தற்காலிகமாக இடம் பெயர்ந்து சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்றைய தினம் கோவை மாவட்டத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. மழையால் இந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள 564 எண் கொண்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அங்கு வசித்து வந்த சுப்புலட்சுமி மாடி இடிந்து கீழே விழும்போது மாடிக்கு சென்றார். அப்போது கூரை இடிந்து விழுந்ததால் அவரும் சேர்ந்து விழுந்தார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் வீட்டுவசதி துறை அமைச்சராக உள்ள முத்துச்சாமி சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதிக்கு வருகை தந்து அனைவரையும் தற்காலிகமாக வேறு பகுதிக்கு செல்லுமாறும் அவர்களின் வீட்டு வாடகையை அரசே செலுத்தும் என்றும் கூறியிருந்தார். மேலும் அங்கு உள்ள இடங்களை பிடித்து அப்புறப்படுத்திவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருவதாகவும் உறுதி கூறியிருந்தார். இந்த நிலையில் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் அரசின் பேச்சை கேட்காமல் அங்கேயே வசித்து வந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story