பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைக்கு தீர்வு: திமுக வேட்பாளர் லக்குமி இளஞ்செல்வி உறுதி

பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைக்கு தீர்வு: திமுக வேட்பாளர் லக்குமி இளஞ்செல்வி உறுதி
X

திமுக வேட்பாளர் லக்குமி இளஞ்செல்விக்காக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என திமுக வேட்பாளர் லக்குமி இளஞ்செல்வி உறுதியளித்துள்ளார்.

கோவை மாநகராட்சியின் 52 வது வார்டு திமுக தேர்தல் அலுவலகத்தை பீளமேடுபுதூரில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் திமுக வேட்பாளர் லக்குமி இளஞ்செல்விக்காக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதி பொதுமக்கள் கழிவுநீர் வடிகால் பழுதடைந்து இருப்பதாகவும், இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து அப்பகுதி வாக்காளர்களிடம் கழிவுநீர் வடிகால் புனரமைக்கவும், குப்பைகளை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை எடுப்பதாகவும், அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும் என வேட்பாளர் லக்குமி இளஞ்செல்வி கூறினார்.

மேலும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கவும் வேட்பாளர்களை அவர் கேட்டுக்கொண்டார். திமுக வேட்பாளர் லக்குமி இளஞ்செல்வி செல்லும் இடம்மெல்லாம் மக்கள் ஆரத்தி எடுத்து வாழ்த்தினர்.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!