சிங்காநல்லூர் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் நா.கார்த்திக், எஸ்ஐஎச்எஸ் காலனி பகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசுகையில்,

ஊழல் மணி எஸ்பி.வேலுமணியின் உள்ளாட்சித்துறை கோவை மாநகரத்திற்கும் இந்த தொகுதிக்கும் எதுவும் செய்யவில்லை. மேம்பாலங்கள் கட்டுவது, ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவற்றில் தரமற்ற பொருட்களை கொண்டு பணிகளை செய்து கோடி கணக்கில் கொள்ளையடித்து விட்டார் என குற்றம் சாட்டியவர், திமுக ஆட்சி காலத்தில், மக்களுக்கு பயன்படும் வகையில் எஸ்ஐஎச்எஸ் காலனியில் இரயில்வே கடவு மேம்பாலம் கட்டப்பட்டது. பெரும்பாலான பணிகள் முடிவுற்ற நிலையில், சர்வீஸ் சாலைக்காக நிலம் கையகப்படுத்தப் படாததால், அந்த மேம்பாலம் கிடப்பில் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கு தீர்வு காணப்படும். இதே போல், மோசமான சாலைகள், குடிநீர் பற்றாக்குறை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளது அவற்றை சரி செய்யப்படும் எனவும், அதிமுக சொத்து வரியை உயர்த்தியது, திமுக சார்பில் போராட்டம் நடத்திய பிறகு அவை நிறுத்தி வைக்கப்பட்டது என கூறினார்.

Tags

Next Story
ai marketing future