கோவையில் அடுக்குமாடி குறுந்தொழில் பேட்டை அமைக்கப்படும்: எம்எல்ஏ கார்த்திக்
சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக் ஹோப்ஸ் கல்லூரி, சிங்காநல்லூர் சாலை, மணீஸ் திரையரங்கு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், "சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் சிறு குறு தொழில் கூடங்கள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த தொழிற் கூடங்கள் வளர்ச்சிக்கு அதிமுக அரசு, கடந்த 10 ஆண்டுகளில் எவ்வித முயற்சியும் எடுக்க வில்லை. மாறாக ஜிஎஸ்டி வரி உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வால் மிகவும் பாதிக்கப்பட்டு, தொழிற்கூடங்கள் மூடு விழா கண்டது. குறிப்பாக, ஜாப் ஒர்க் எடுத்து பணி புரிபவர்கள் 18 சதவீத வரி உயர்வால் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர தொழிற் கூடங்களுக்கு இந்த அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. சிறு குறு தொழிற்கூடங்களின் வளர்ச்சிக்கு, குறுந்தொழில் பேட்டை அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் நான் பேசினேன். அதிமுக அரசு அதை கண்டுகொள்ள வில்லை. இப்போது கூறுகின்றேன். என்னை வெற்றி பெற வைத்தால், திமுக ஆட்சி அமைந்தவுடன், அடுக்குமாடி குறுந்தொழில் பேட்டை அமைக்கப்படும் என உறுதி கூறுகின்றேன் என்று கூறியவர், தொழிற்துறையினருக்கும், அரசிற்கு ஒரு பாலமாக நான் செயல்படுவேன் என கூறினார். கொரோனா காலத்தில் வழங்க வேண்டும் என ஏற்கனவே கூறியதை போல 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். கோவை மாநகராட்சியில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திட்ட பணிகளை இணையத்தளத்தில் பதிவிடமால் மறைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வீடு வீடாக நடந்து சென்று துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி வாக்கு சேகரித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu