நாயை அடித்து கொன்றவர்கள் மீது வழக்குப்பதிவு

நாயை அடித்து கொன்றவர்கள் மீது வழக்குப்பதிவு
X
தங்கை மகளை கடித்த ஆத்திரத்தில் வட மாநில இளைஞருடன் சேர்ந்து மரத்தில் கட்டி வைத்து நாயை அடித்துக் கொன்றுள்ளார்.

கோவை பீளமேடு வ.உ.சி. காலனி பகுதியில் பாலசுந்ததரம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மற்றொரு வீட்டில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாலசுந்தரம் வளர்த்து வந்த நாய், சீனிவாசனின் தங்கை மகளை கடித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன், வட மாநில இளைஞர் ஒருவருடன் சேர்ந்து நேற்று மாலை நாயை மரத்தில் கட்டி வைத்துள்ளார். மேலும் இருவரும் நாயை கொடூரமாக அடித்து கொன்றுளார்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற விலங்குகள் நல வாரிய மாவட்ட அலுவலர் பிரதீப் பிரபாகரன் கொடுத்த பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் சீனிவாசன் மற்றும் உதவிய நபர் இருவர் மீதும் விலங்குகளை கொல்லுதல் மற்றும் விலங்குகள் வன்கொடுமை சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!