பிளாஸ்டிக் இரட்டை இலை சின்னங்கள் பறிமுதல்

பிளாஸ்டிக் இரட்டை இலை சின்னங்கள் பறிமுதல்
X

கோயமுத்தூரில் உரிய ஆவணங்கள் இல்லாத பிளாஸ்டிக் இரட்டை இலை சின்னங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயராம் புகைப்படம் பதித்த டி-ஷர்ட், பிளாஸ்டிக் இரட்டை இலை சின்னம், நோட்டீஸ் மற்றும் அட்டை பதாகைகள் ஏற்றி வந்த ஆட்டோவை தண்ணீர் பந்தல் அருகே பறக்கும் படையினர் பிடித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் வாகனத்தில் கொண்டு வரும் பொருட்களுக்கான ஆவணங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் வாகனத்தில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில்கள் அளித்ததால் அதிகாரிகள் ஆட்டோவை கோவை தெற்கு அலுவலத்திற்கு எடுத்து சென்றனர்.

பின்னர் வாகனத்தில் இருந்து பொருட்களை இறக்கி ஆவணங்களை சோதித்த போது நோட்டீஸ், டீ-சர்ட், அதிமுக கொடிகள் உள்ளிட்டவைகளுக்கு ஆவணங்கள் இருந்ததால் அதை ஒப்படைத்தனர். பின்னர் 1500 பிளாஸ்டிக் இரட்டை இலைகள், 3 ஆயிரம் இரட்டை இலை அட்டைகள், 500 பதாகைகளுக்கு அனுமதிக் கடிதம் ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story