யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த கோவை மாற்றுத்திறனாளி இளைஞர்
ரஞ்சித்.
கோவை ஹோப்காலேஜ் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் - அமிர்தவள்ளி தம்பதியினர். இவர்களது இரண்டாவது மகன் ரஞ்சித் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி. இவர் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்த நிலையில், யுபிஎஸ்சி தேர்வு எழுதியிருந்தார். இந்த தேர்வு முடிவுகளில் இந்திய அளவில் 750 இடத்தை ரஞ்சித் பெற்று அசத்தியுள்ளார்.
கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்த போது காம்பஸ் இன்டர்வியூவில் செவித் திறன் குறைபாட்டை காரணம் காட்டி நிராகரித்தாகவும், தன்னுடைய திறமையை நிருபிக்க தொடர்ந்து முயன்று யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ரஞ்சித் தெரிவித்தார். பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைவாக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும், மாற்று திறனாளிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன் எனவும் ரஞ்சித் தெரிவித்தார். குடிமைப் பணி தேர்வில் வென்ற ரஞ்சித்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல பல்வேறு தரப்பினரும் ரஞ்சித்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu