கோவையில் கஞ்சா விற்ற காதல் ஜோடி கைது: 2.25 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவையில், கஞ்சா விற்பனை செய்ததாக, காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை பீளமேடு காந்தி நகரைச் சேர்ந்தவர் சூரியபிரசாத். 21 வயதான இவர் கல்லூரி படிப்பை முடித்தவர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வினோதினி (21) என்பவரை காதலித்து வந்துள்ளார். கோவை நேரு நகர் வீரியம்பாளையம் ரோட்டில் போலீசார் ரோந்து செல்லும் போது, இருவரும் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்தனர்.

போலீசார் சந்தேகமடைந்து, அவர்களது பையில் சோதனை செய்தபோது சுமார் இரண்டே கால் கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், பீளமேடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர்.

கைது செய்யப்பட்ட வினோதினி, டிப்ளமோ நர்சிங் படித்தவர், சூரிய பிரசாத் பட்டப்படிப்பு முடித்தவர். இருவரும் காதலித்து வந்த நிலையில், கோவை காந்தி மாநகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்தனர். திருமணம் செய்து கொள்ள இருவரும் திட்டமிட்டு இருந்த நிலையில் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு கஞ்சா கடத்திய வழக்கில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் பீளமேடு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!