/* */

அதிக முதலீடுகளை ஈர்க்க புதிய கொள்கை: அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழகத்தில் அதிக முதலீடுகளை ஈர்க்க புதிய கொள்கை கொண்டு வரப்படும் என்று, அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் தெரிவித்தார்.

HIGHLIGHTS

அதிக முதலீடுகளை ஈர்க்க புதிய கொள்கை: அமைச்சர் மனோ தங்கராஜ்
X

கோவை டைடல் பார்க் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் சிறப்பு பொருளாதார மண்டல கட்டிடத்தை பார்வையிட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்.

கோவை விளாங்குறிச்சியில் உள்ள டைடல் பார்க் வளாகத்தில், புதிதாக சிறப்பு பொருளாதார மண்டல கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கோவையில், 114 கோடி ரூபாய் இரண்டாவது எல்காட் அமைக்க கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. அதை ஆய்வு செய்து விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொழில் நுட்ப பூங்காவை அமைத்து சிறப்பாக செயல்படுத்த உள்ளோம்.

இந்த துறையின் மூலமாக இளைஞருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தென் மாவட்டங்களில் மிக குறைவாக தொழில் வாய்ப்பு உள்ளது அதனால் அவர்களது சென்னை போன்ற பிற மாவட்டங்களுக்கு செல்கின்றார். அதனை தடுக்க தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக கவனம் செலுத்தப்படும். கடந்த 10 ஆண்டுகளில் தொழில் முதலீடு அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், டைட்டில் பார்க் வளாக கூட்டரங்கில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் நீரஜ் மித்தல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 July 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்