சீட் கிடைக்காதவர்களுக்கு அரசு பொறுப்பு: அமைச்சர் செந்தில்பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி.
கோவை மசக்காளிபாளையம் பகுதியில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு 32 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். முன்னதாக பேசிய அவர், மாநகராட்சி தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் விரக்தியில் இருப்பார்கள் எனவும் ஆனால் தேர்தல் முடிந்ததும் அவர்களுக்கு அரசுப்பொறுப்புகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் தொகுதிகளை இழந்ததை குறிப்பிட்ட அவர் இம்முறை அது போல் நடக்காமல் தடுக்க பகுதி செயலாளர்கள் தங்களது பூத்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு தோழமை கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என அவர் கட்சியினருக்கு அறிவுறுத்தினார். கோவை மாவட்டத்தில் 811 இடங்களுக்கு 3500 பேர் விருப்பமனு தாக்கல் செய்ததால் பலருக்கு சீட் கொடுக்க முடியவில்லை எனக்கூறிய அவர், சீட் கிடைக்காதவர்கள் வீடுகளுக்கே சென்று வேட்பாளர்கள் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu