எஸ்.ஐ.எச்.எஸ் காலனி ரயில்வே மேம்பாலத்திற்கு நிதி ஒதுக்கீடு: திமுகவினர் கொண்டாட்டம்

எஸ்.ஐ.எச்.எஸ் காலனி ரயில்வே மேம்பாலத்திற்கு நிதி ஒதுக்கீடு: திமுகவினர் கொண்டாட்டம்
X

இனிப்புகள் வழங்கிய முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக்.

எஸ்ஐஎச்எஸ் காலனி இரயில்வே உயர்மட்ட மேம்பாலம் பணியை முடிக்க ரூ29 கோடி நிதி ஒதுக்கி அரசாணையை வெளியிடப்பட்டது.

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் எஸ்ஐஎச்எஸ் காலனி பகுதியை திருச்சி சாலையுடன் இணைக்க ரயில்வே மேம்பாலத்தை திமுக அரசு அப்போதைய முதல்வர் கருணாநிதி, துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களால் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. மேம்பாலத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில் சர்வீஸ் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்ற போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதன் பின்னர் மேம்பால பணிகள் தடைபட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் மேம்பால பணிகள் நடைபெறவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மேம்பால பணிகளை முடித்திட வலியுறுத்தி கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் தலைமையில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தவுடன் மேம்பாலம் பணிகள தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு அவர்களுக்கும் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளிக்கபட்டது.

இந்நிலையில் எஸ்ஐஎச்எஸ் காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் பணியை முடிக்க ரூ29 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. இதனை வரவேற்று கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Tags

Next Story
தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்..!