சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
X
கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

கோவை சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திக், திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.

இதையொட்டி கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்திற்கு கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். தேர்தல் அலுவலர் ராம்குமாரிடம் கார்த்திக் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கார்த்திக், ' திமுக மெகா கூட்டணி அமைத்து இருப்பதால் தேர்தலில் அபார வெற்றி பெறும். மத்திய, மாநில அரசுகளினால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இப்பகுதியில் மேம்பாலம், சாலை உள்ளிட்ட வசதிகளை மாநில அரசு செய்து தரவில்லை.' எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு