கோவை மாநகராட்சியில் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

கோவை மாநகராட்சியில் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
X

திமுக இளஞ்செல்வி வேட்பு மனுத்தாக்கல்.

கூட்டணி கட்சியினருடன் உடன்படிக்கை ஏற்பட்டதை அடுத்து இன்று முழுமையான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது.

கோவை மாநகராட்சியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினருடன் உடன்படிக்கை ஏற்பட்டதை அடுத்து இன்று முழுமையான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதையடுத்து, திமுக வேட்பாளர்கள் பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கோவை மாநகராட்சி 52 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் இலக்குமி இளஞ்செல்வி கோவை மாநகர் கிழக்கு மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து அவர் பேட்டியின்போது கூறுகையில், ஏற்கனவே, கவுன்சிலராக இருந்துள்ளதால், மக்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு, அவர்களின் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடியும் என்றவர், அடிப்படை வசதிகள் செய்து தரவும், பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுப்பேன் என்றும், சீரான குடிநீர் வினியோம், சாலை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறினார்.

இதேபோல், 72வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திக் செல்வராஜ், மேற்கு மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர், ஏற்கனவே கவுன்சிலராக இருந்தவர், மேலும், தமிழக முதல்வரின் எண்ணங்களுக்கு ஏற்ப, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெற்று தருவேன் என கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!