மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
X

மத்திய அரசை கண்டித்து முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

திமுக நிர்வாகிகள் வீடுகளின் முன்பு கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறவும், கேஸ் மற்றும் பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த கோரியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பீளமேட்டில் உள்ள அவரது வீட்டின் முன்பும், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் அண்ணாநகரில் உள்ள அவரது அலுவலகம் முன்பும், கோவை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிஆர்.இராமச்சந்திரன் மேட்டுப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தின் முன்பும், புறநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தொண்டாமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தின் முன்பும், கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர்.வரதராஜன் பொள்ளாச்சியில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவரவும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்க கூடாது என வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரவு உணவுக்குப் பின் உடல் எடை குறைக்க இந்த 5 செயல்களை தினமும் செய்யுங்கள்!