சிறுகுறு தொழிற்கூடங்களை அழித்து விட்டன: திமுக வேட்பாளர் பிரச்சாரம்

சிறுகுறு தொழிற்கூடங்களை அழித்து விட்டன: திமுக வேட்பாளர் பிரச்சாரம்
X
தொழிற்கூடங்கள் மூடு விழா கண்டுள்ளது. இதனால், பல லட்சம் தொழிலாளர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். -திமுக வேட்பாளர் நா.கார்த்திக்.

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக் ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், தென் இந்தியாவின் மான்செஸ்டர் என இருந்த கோவையை இன்று தொழில் துறைகளை பாஜக - அதிமுகவினர் அடியோடு அழித்து விட்டனர். கடந்த சில ஆண்டுகளாக சிறு குறு தொழிற்கூடங்களை நம்பியே கோவை இருந்த நிலையில், தற்போது இவர்களின் ஆட்சியில் தொழிற்கூடங்கள் மூடு விழா கண்டுள்ளது. இதனால், பல லட்சம் தொழிலாளர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். மக்கள் பணிகள் எதுவும் செய்ய வில்லை. மக்களை திரட்டி அதிகாரிகளிடத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. மாறாக கொள்ளை அடிப்பதிலேயே அதிமுகவினர் குறியாக இருந்தனர். ஆனால், திமுகவின. தேர்தல் அறிக்கையில் மக்களுக்காக என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என பட்டியலிட்டவர், திமுக தலைவர் சொன்னதை நிறைவேற்றி தருவார் என கூறினார்.

Tags

Next Story