கோவையில் குதிரை வாகனத்தில் பயணம் மேற்கொண்ட தம்பதியினர்

X
By - V.Prasanth Reporter |18 April 2022 4:00 PM IST
கோவை இராமநாதபுரத்தில் குதிரை வாகனத்தில் பயணம் மேற்கொண்ட தம்பதியினரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். பைக் மெக்கானிக். இவருக்கும், ஜெயம்கொண்டம் பகுதியைச் சேர்ந்த பார்கவி இருவரும், கடந்த 6 தேதி ஜெயங்கொண்டத்தில் திருமணம் செய்து கொண்டனர். நேற்று, கோவையில் திருமண வரவேற்பு நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு மணமகன் பிரசாந்த், மணமகள் பார்கவி ஆகியோர் குதிரை வண்டியில் ஊர்வலமாக சென்றுள்ளனர். அவர்களுக்கு துணையாக அவர்களது நண்பர்களும் இருசக்கர வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். சாலையில் குதிரை வண்டியில் சென்ற தம்பதியை பொது மக்கள் வியந்து பார்த்தனர். மணமகன் குதிரை வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர் எனவும், குதிரை ரேஸில் கலந்து கொள்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu