/* */

கோவையில் இன்று 215 பேருக்கு கொரோனா தொற்று: 5 பேர் உயிரிழப்பு

கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 29 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கோவையில் இன்று 215 பேருக்கு கொரோனா தொற்று: 5 பேர் உயிரிழப்பு
X

கொரோனா பரிசோதனை (பைல் படம்)

கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. கோவையில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 29 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தினசரி பாதிப்புகள் 200 ஐ கடந்துள்ளது. கோவையில் இன்று 215 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 36 ஆயிரத்து 481 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2084 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 173 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரத்து 124 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 5 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2273 ஆக அதிகரித்துள்ளது.

Updated On: 2 Sep 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!