கோவை ஒண்டிபுதூர் ஆஞ்சநேயர் காலனி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிக்க முடிவு
X
By - V.Prasanth Reporter |19 March 2021 12:00 PM IST
கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் காலனி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பொது கழிப்பிடம் கட்டி தராததால் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்காமல், தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஆஞ்சநேயர் காலனியில், 250 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு பொது கழிப்பறை வசதி இல்லாததால் இளம் பெண்கள், வயதானவர்கள் உட்பட அனைவரும் சிரமம்மடைந்து வருகின்றனர். திறந்தவெளியில் மலம் கழித்து வருவதால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் தேர்தல்களில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறிய வேட்பாளர்கள் யாரும் நிறைவேற்றவில்லை எனவும், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உட்பட பலரிடம் மனு அளித்தும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் சுமார் 1500 வாக்காளர்களும் இந்த தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu