கோவை:கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக பிபிஇ கவச உடையணிந்து கொரோனா வார்டுக்கு சென்ற காட்சி.
கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளுக்கு பின்னர், கோவைக்கு ஸ்டாலின் கார் மூலம் வருகை தந்தார்.
பின்னர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 50 கோவிட் கேர் கார் ஆம்புலனஸ் வாகனங்களை கொடி அசைத்து துவங்கி வைத்தார். கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கு 10 கார்கள் வீதம் 50 கோவிட் கேர் ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டிற்கு வந்தன. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இதையடுத்து பி.பி.இ கிட் எனப்படும் பாதுகாப்பு கவச அடை அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவிற்குள் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
மேலும் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்தரன், அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu