கோவை அம்மா உணவகங்களில் திமுக சார்பில் இலவச உணவு - அமைச்சர் அறிவிப்பு!

கோவை அம்மா உணவகங்களில் திமுக சார்பில் இலவச உணவு - அமைச்சர் அறிவிப்பு!
X

கோவை மசக்காளிபாளையம் அம்மா உணவகத்தில்  அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் இலவச உணவு  திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

கோவை மாவட்ட அம்மா உணவகங்களில் திமுக சார்பில் இலவச உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

கொரோனா ஊரடங்கில் ஏழை எளிய மக்கள் பசியாறும் வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களிலும் திமுக சார்பில் இன்று முதல் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் கோவை மாவட்டத்துக்கு என தனி ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களில் ஏழை எளிய மக்கள் பசியாறும் வகையில் திமுக சார்பில் உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், தொற்று பாதிப்பு அதிகமுள்ள நீலகிரி திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களிலும் திமுக சார்பில் இலவசமாக உணவு வழங்கப்படும் எனவும் அமைச்சர்கள் இருவரும் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!