கோவை 52 வது வார்டு திமுக வேட்பாளர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

கோவை 52 வது வார்டு திமுக வேட்பாளர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
X

திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி வாக்குசேகரிப்பு.

கோவை மாநகராட்சி 52 வது வார்டில் பாேட்டியிடும் திமுக வேட்பாளர் த.இலக்குமி இளஞ்செல்வி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

கோவை மாநகராட்சி 52 வது வார்டில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளர் த.இலக்குமி இளஞ்செல்வி போட்டியிடுகிறார். அவர் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை விளக்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தனலட்சுமி நகர், ராம் லட்சுமணன் நகர், ஸ்ரீ தனலட்சுமி நகர், தனலட்சுமி நகர் எக்ஸ்டென்ஷன் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை கொடுத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, எனக்கு இந்த வார்டில் போட்டியிட வாய்ப்பளித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டாவது முறையாக நான் இந்த 52 வது வார்டில் போட்டியிடுகிறேன். நான் வெற்றி பெற்றதும் இந்த பகுதியில் உள்ள மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றி தருவேன். செம்மொழி மாநாடு நடந்தபோது மறைந்த முதல்வர் கலைஞரால் கோவை மாநகரில் 100 செம்மொழி பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த பூங்காக்கள் தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இந்த பகுதியில் உள்ள செம்மொழி பூங்காவை புதுப்பித்து தர நடவடிக்கை எடுப்பேன்.

மேலும் இந்த பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருவதாக மக்கள் தெரிவித்தனர். நான் வெற்றி பெற்றதும் இரண்டு நாளைக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பேன். மேலும் மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை இணைப்பு ஆகிய பணிகளை உடனடியாக செய்து தருவேன் எனவே வாக்காளர்கள் ஆகிய நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil