கோவை: ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை: ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்!
X

கோவையில், 21 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட ரமேஷ்.

கோவை அருகே, ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையில், வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யபடுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவிக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கோவை சிங்காநல்லூர் பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், கஞ்சா கடத்தி வந்த நபர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த ராமையா மகன் ரமேஷ் (44) என்பதும், ஆந்திர மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக 21 கிலோ கஞ்சாவை கடத்தி வந்துள்ளதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!