10 ஆண்டுகால ஆட்சியில் செய்யாத பணிகளை 6 மாதத்தில் முதல்வர் செய்வார்: செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி.
கோவை மாவட்டம் முழுவதும், பொது மக்களை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்து மனுக்களை பெற்று வருகின்றார். இந்நிலையில், கோவை, சரவணம்பட்டி, 28வது வார்டு விமல் ஜோதி பள்ளியில் துவங்கிய மக்கள் சபை நிகழ்ச்சி தொடர்ந்து , கோவை மாநகர் மேற்கு மாவட்டத்திறகு உட்பட்ட எஸ்ஆர்பி நகர், பூந்தோட்டம் நகர், கணபதி, மணியகாரம்பாளையம் பகுதிகளிலும், கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம், பீளமேடு உள்ளிட்ட ஒரே நாளில் 10 வார்டுகளில் தனி தனியாக மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் மக்களை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி மனுக்களை பெற்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேட்டியின்போது கூறுகையில், தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, கோவை மாநகராட்சியின் 100 வார்டுகள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் 50 இடங்கள் என மொத்தமாக 150 இடங்களில் மக்கள் சபை நடத்துவதன் திட்டமிடப்பட்டு, தற்போது 44 இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் 27374 மனுக்கள் வரப்பெற்றுள்ளது என்றும், இன்று 10 இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது என தெரிவித்தார்.
முதல்வர் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் மனு கொடுத்து வருவதாகவும், இந்த மனுக்கள் மீது உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.மேலும், தற்போது பருவ மழை பெய்து வரும் நிலையில், சீரான மின் வினியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது என கூறினார்
எதிர்கட்சிகள் குற்றாச்சாட்டு சொல்வதாக கூறிய கேள்விக்கு,மே 7 ந்தேதி முதல்வர் பொறுப்பேற்றார்.அப்போது நோய் தொற்று உச்சத்தில் இருந்தது. அதை எதிர்கொண்டு, தமிழகத்தை 2 மாதத்தில் மீண்டெடுத்தார் தமிழக முதல்வர். கடந்த காலங்களில் எவ்வித திட்டமிடுதலும் இல்லாததால், பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல், கடந்த ஆட்சியில் செய்யாத பணிகளை 6 மாதத்தில் முதல்வர் செய்து விடுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. கடந்த கால ஆட்சியில், போடப்பட்ட துணை மின் நிலையங்கள், தாழ்வான இடங்களில், இருந்தமை கண்டறியப்பட்டது என்றும், கூறியவர், வளர்ச்சி மணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டங்கள் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu