நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் - மத்திய இணையமைச்சர் எல். முருகன் பேட்டி
எல். முருகன் செய்தியாளர் சந்திப்பு
கோவை கொடிசியா அருகே தனியார் விடுதியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன் மத்திய பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். மத்திய இணை அமைச்சருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உடனிருந்தனர். அப்போது பேசிய எல்.முருகன், தலைசிறந்த , வரலாறுமிக்க பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும், விசன் இந்தியா அடுத்த 25 வருடங்களில் நாட்டின் வளர்ச்சியை மனதில் வைத்து பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்த பி.எம் கதிசக்தி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் 7 முக்கிய துறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நாமக்கல் - முசிரி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிப்பாதை கொண்டு வரப்பட்டுள்ளது எனவும், இரயில்வே துறையில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா சூழ்நிலை காரணமாக ஒட்டல்கள் தொழில்கள் பாதிப்பில் இருந்து மீளவில்லை எனவும் கோதாவரி, பென்னாறு காவேரி நதிகள் இணைப்பு மூலம் தமிழகத்தில் நீர் பாசனம் அதிகளவில் கைகொடுக்கும் என தெரிவித்தார். நதிகள் இணைப்பது சாதாரண செயல் இல்லை எனவும் இதை மாநில அரசுடன் சேர்ந்து மத்திய அரசு கொண்டு வரப்பட்டுள்ளது. தொலைக்காட்சி வாயிலாக 1 முதல் 12 வகுப்பு வரைக்கும் பாடங்கள் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளதாகவும் அனைவருக்கும் சுத்தமான சுகாதாரமான குடிநீர் கிடைக்க முடிவு செய்துள்ளோம் எனவும் அனைத்து துறையிலும் சிறந்து விளங்ககூடிய பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu