ஊழல் கட்சிக்கு மாற்றாக இன்னொரு ஊழல் கட்சியை தேர்ந்தெடுப்பது தவறு - கமல்ஹாசன்

ஊழல் கட்சிக்கு மாற்றாக இன்னொரு ஊழல் கட்சியை தேர்ந்தெடுப்பது தவறு -  கமல்ஹாசன்
X
கோவையில் பிரசார கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார். அப்போது ஒரு ஊழல் கட்சிக்கு மாற்றாக இன்னொரு ஊழல் கட்சியை தேர்ந்தெடுப்பது தவறு என தெரிவித்தார்.

கோவை ஆவாராம்பாளையம் பகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், மின்தடையை ஏற்படுத்தி பணப்பட்டுவாடா செய்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

ஒரு ஊழல் கட்சிக்கு மாற்றாக இன்னொரு ஊழல் கட்சியை தேர்ந்தெடுப்பது தவறு எனவும், கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை ஒப்பீட்டு பார்த்து வாக்களியுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

கை நீட்டி பணத்தை வாங்கினால் திரும்பி கேள்வி கேட்க முடியாது எனவும், ம.நீ.ம என்ற கட்சியை இனி தமிழக அரசியலில் இருந்து அகற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் எல்லையை காப்பது மட்டும் தேசபக்கி கிடையாது எனவும், நம்முடைய வீட்டையும், பக்கத்து வீட்டையும் மதித்து பாதுகாப்பதும் தேச பக்தி தான் எனவும் கூறிய அவர், பக்கத்து வீடு எரியும் போது என் வீடு பாதுகாப்பாக இருந்தால் போதும் என நினைப்பது தேசபக்தி அல்ல எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!