பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி- 60 பேர் கைது

பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி- 60 பேர் கைது
X

பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற தபெதிக அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை இனப்படுகொலை தொடர்பாக ஐநா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து தாராபுரத்தில் பாஜக தலைவர் முருகனை ஆதரித்து நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் பிரதமர் மோடியை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பீளமேட்டில் கறுப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காத மோடியே திரும்பி போ என மோடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனிடையே காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று 10 பெண்கள் உள்ளிட்ட 60 பேரை கைது செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!