தடுப்பூசி மையத்தில் திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம்
கோவையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்னிலையில் கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் சார்பில் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி மையங்களுக்கு சென்று பொது மக்களுக்கு கபசுர குடிநீர்,மாஸ்க், பிஸ்கட், குடிநீர் போன்றவைகளை அதிமுக சார்பில் வழங்கி வருகின்றார். இன்று சிங்காநல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் 45 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வரும் நிலையில், அங்கு சென்ற எம்.எல்.ஏ கே.ஆர்.ஜெயராம் மற்றும் அதிமுகவினர் தடுப்பூசி போட வரும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மாஸ்க் மற்றும் பிஸ்கட் வழங்கிவந்தனர்.
இந்நிலையில் அங்கு வந்த திமுகவினர் எம்.எல்.ஏ கே.ஆர்.ஜெயராமிடம் வாக்குவாததில் ஈடுபட்டனர். ஊசி போடும் இடத்தில் வந்து கபசுர குடிநீர்,பிஸ்கெட், மாஸ்க் போன்றவற்றை கொடுக்க கூடாது என திமுகவினர் எம்.எல்.ஏவுடன் வாக்குவாத்த்தில் ஈடுபட்ட நிலையில் , போலீசார் இரு தரப்பையும் சமரசபடுத்தினர். அப்போது சிங்காநல்லூர் எம்.எல்.ஏ ஜெயராமுக்கு ஆதரவாக கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனும் வந்த நிலையில், காவல் துறையினர் திமுக, அதிமுக இரு தரப்பையும் சமரசபடுத்தினர்.
இதனையடுத்து ஆரம்பசுகாதார நிலைய வாசலில் தடுப்பூசி போட வந்தவர்களுக்கு அதிமுக எம்.எல்ஏக்கள் ஜெயராம், அம்மன் அர்ஜூனன் ஆகியோர் கபசுரகுடிநீர், பிஸ்கட், மாஸ்க் போன்ற நிவாரண உதவிகளை வழங்கினர். இரு கட்சியினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu