ஆட்டோ ஓட்டி ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளர்

ஆட்டோ ஓட்டி ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளர்
X
சிங்காநல்லூர் தொகுதியில் கே.ஆர் ஜெயராம் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் கே.ஆர் ஜெயராம் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் ஒரு வார காலமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர் பீளமேடு காய்கறி சந்தையில் காய்கறி விற்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இன்று பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட அவர் ஆட்டோ ஓட்டி மக்களிடையே ஆதரவு திரட்டினார். அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர்களான கமலஹாசன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் ஆட்டோவில் பயணித்து மக்களை சந்தித்த நிலையில் சிங்காநல்லூர் அதிமுக வேட்பாளர் ஆட்டோ ஓட்டி பிரச்சாரம் மேற்கொண்டது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!