இஎஸ்ஐ மருத்துவமனைக்கு 3 ஸ்டெச்சர்கள் வழங்கிய அதிமுக, பாஜக எம்.எல்.ஏ.க்கள்..!
இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய எம்.எல்.ஏ.க்கள்
கோவையில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பிரதான மருத்துவமனைகளில் ஒன்றாக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை விளங்குகிறது. அங்கு பெரும்பாலும் வயதானவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுகின்றனர். அங்கு சிகிச்சைக்காக வரும் வயதானவர்களை மருத்துவமனைக்குள் அழைத்து செல்வதற்கு கூடுதலாக சக்கர நாற்காலி, தூக்கு படுக்கைகள் எனப்படும் ஸ்டெச்சர்கள் தேவை ஏற்பட்டது.
இதனையடுத்து இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் ஆகியோர் இணைந்து 3 ஸ்டெச்சர்களை வழங்கினர். மேலும் இதனை தூக்கிச் செல்லும் மருத்துவமனை உதவியாளர்களுக்கு தேவையான முகக் கவசங்கள், கையுறைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் உள்ளிட்டவற்றை வழங்கினர். மேலும் மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் குறித்த மருத்துவமனை முதல்வர் ரவீந்திரனிடம் இருவரும் கேட்டறிந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu