காேவையில் பொறியாளரின் வீட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளை

காேவையில் பொறியாளரின் வீட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளை
X

கொள்ளை நடந்த வீடு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 29 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் வசித்து வருபவர் சையது இப்ராகிம். பொறியாளாரான சையது இப்ராகிம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, மருத்துவ சிகச்சையில் இருந்த தனது மாமனாரை பார்க்க குன்னூர் சென்றுள்ளார். பத்து நாட்களாக குன்னூரிலேய தங்கியிருந்த சையது இப்ராகிம் நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கபட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த சையது இப்ராகிம் வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 29 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.

மேலும் இது குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!