/* */

கோவை வளர்ச்சிக்காக ரூ. 200 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவையில் பழுதாகி உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் விளக்குகள் உடனடியாக சரி செய்யப்படும்.

HIGHLIGHTS

கோவை வளர்ச்சிக்காக ரூ. 200 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி
X

அமைச்சர் செந்தில் பாலாஜி.

கோவை மாவட்டம் முழுவதும் மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரிடையாக சந்தித்து மனுக்களை பெற்று வருகின்றார். கடந்த 30 ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி மூலம் பொதுமக்கள் மனுக்களை நேரிடையாக அமைச்சரிடம் வழங்கி வருகின்றனர். தொடர்ந்து, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மசக்காளிபாளையம், உடையம்பாளையம், செளரிபாளையம், இராமநாதபுரம், சாரமேடு, வடகோவை உள்ளிட்ட 12 இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் மனுக்கள் ஒரே நாளில் பெறப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளரகளிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தில் இதுவரை 88 இடங்களில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் 64 ஆயிரம் மனுக்கள் பொதுமக்களிடம் வரப்பெற்றுள்ளது. கோவையில் பழுதடைந்த சாலைகள் திட்ட மதிப்பீடு பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்பிறகு முதல்வரின் பார்வைக்கு எடுத்து சென்று மோசமான சாலைகள் புதுப்பிக்கப்படும். கோவையில் பழுதாகி உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் விளக்குகள் உடனடியாக சரி செய்யப்படும். கோவை மாநகராட்சி வளர்ச்சி பணிக்காக 200 கோடி மதிப்பிலான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

Updated On: 15 Nov 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  4. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  5. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  10. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு