இலவசங்களால் மக்கள் ஏமாற மாட்டார்கள்- மநீம வேட்பாளர்

இலவசங்களால் மக்கள் ஏமாற மாட்டார்கள்- மநீம வேட்பாளர்
X

அதிமுகவின் இலவச திட்டங்களால் மக்கள் ஏமாற மாட்டார்கள் என மக்கள் நீதி மய்ய துணைத்தலைவர் மகேந்திரன் கூறினார்.

கோயமுத்தூர் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில், அக்கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் போட்டியிடுகிறார். இதையொட்டி சிங்காநல்லூரிலுள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மகேந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமாரிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மகேந்திரன்,சட்டமன்ற தொகுதி வாரியான தேர்தல் அறிக்கை இந்த வார கடைசியில் வெளியிட உள்ளோம் எனவும், கொங்கு மண்டலத்தில் மநீமவிற்கு சிறப்பான வரவேற்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கோவை தெற்கு, சிங்காநல்லூர் தொகுதிகளில் மக்களிடம் தங்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது எனவும், மாறி மாறி மக்கள் ஓட்டு போட்டிருந்தாலும், யாரும் எதுவும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார். மாற்றத்திற்கான வேட்பாளராக இருப்பேன் எனவும், அதிமுகவின் இலவச திட்டங்களால் மக்கள் ஏமாற மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!