கிரைண்டர், மோட்டாருடன் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்

கிரைண்டர், மோட்டாருடன் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்
X

கோயமுத்தூரில் கிரைண்டர், மோட்டாருடன் வந்து சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். கோயமுத்துார், சிங்காநல்லூர் தொகுதியில் தொழில் முனைவோர்கள் சார்பில் கோப்மா என்ற கோவை மாவட்ட பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மணிராஜ் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்திற்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த மணிராஜ், கிரைண்டர், மோட்டார் உள்ளிட்டவற்றை எடுத்து வந்தார். அவற்றை எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி மறுத்ததை அடுத்து, தனது ஆதரவாளர்கள் இருவருடன் சென்ற மணிராஜ் தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமாரிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

மூலப்பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வினால் தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தொழில்துறையினருக்கு மத்திய, மாநில அரசுகள் உதவவில்லை எனவும் மணிராஜ் குற்றம்சாட்டினார். மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு தொழில்துறையினரின் எதிர்ப்பை ஜனநாயக முறைப்படி தெரிவிக்கும் வகையில் தேர்தலில் போட்டியிடுவதாகவும், தொழில்துறை பிரச்சனைகள் மற்றும் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண பாடுபடுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil