சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு
X
திமுக அபார வெற்றி பெறும் என நம்பிக்கை

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் சென்னையில் இருந்து கார் மூலம் கோவைக்கு வருகை தந்தார். அப்போது கோவை ஹோப் காலேஜ் சந்திப்பு அருகே திமுக தொண்டர்கள் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து மலர்தூவி மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த தொகுதி மக்கள் சார்பாக தன்னை வேட்பாளராக நியமித்த திமுக தலைவருக்கு நன்றி தெரிவித்த கார்த்திக், எங்களுடன் பலமான கூட்டணி உள்ளதால், திமுக கூட்டணி அபார வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!