பெட்ரோல்,டீசல் விலை உயர்வு தேர்தலை பாதிக்காது- எல்.முருகன்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு தேர்தலை பாதிக்காது- எல்.முருகன்
X

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது என கோவையில் பாஜக தலைவர் முருகன் தெரிவித்தார்.

கோவையில் வரும் 25ம் தேதி கொடிசியா அருகே உள்ள மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது. பொதுகூட்ட மேடை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.இதில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி மற்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை இணை அமைச்சர் வி.கே சிங் பா.ஜ.க மாநில தலைவர் முருகன்,மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.பூமி பூஜை நிகழ்விற்கு பின்னர் பாஜக மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது ,சென்னையில் முதல்வர் - பிரதமர் சந்திப்பில் 10 நிமிடம் என்ன பேசினார்கள் என தெரியவில்லை. பெட்ரோல்,டீசல் விலை உயர்வு தேர்தலில் வாக்குகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது .விரைவில் விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கையை அரசு எடுக்கும் எனவும் நிச்சயம் விலை குறையும் எனவும் தெரிவித்தார்.கேஸ் மானியத்தை எந்த விதத்திலும் குறைக்கவில்லை என தெரிவித்தவர் பா.ஜ.க பூரண மதுவிலக்கை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது எனவும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வந்தவுடன் இது குறித்து பேசி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி மீது அதிருப்தி இருப்பதால் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்கின்றனர் என தெரிவித்த அவர் கிரண்பேடி நீக்கம் குறித்த கேள்விக்கு புதுச்சேரி விவகாரம் குறித்து நான் பேசுவது நன்றாக இருக்காது என எல்.முருகன் தெரிவித்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil