/* */

பக்ரீத் பண்டிகை: கோவையில் ஆடுகள் விற்பனை விறுவிறு

பக்ரீத் பண்டிகையையொட்டி கோவையில் ஆடுகள் விற்பனை சூடுபிடித்தது

HIGHLIGHTS

பக்ரீத் பண்டிகை: கோவையில் ஆடுகள் விற்பனை விறுவிறு
X

கோப்புப்படம்

நாடு முழுவதும் வருகிற 29-ந் தேதி இஸ்லாமிய மக்களின் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் பண்டிகை தினத்தில் இஸ்லாமியர்கள் ஆடு, மாடு ஆகியவற்றை குர்பானி கொடுத்து ஏழை- எளிய மக்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்குவது வழக்கம்.

இதற்காக கோவையில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய உக்கடம், கோட்டைமேடு, புல்லுக்காடு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்து உள்ளனர்.

மேலும் பக்ரீத் பண்டிகைக்கு சில நாட்களே உள்ளதால் ஆடுகளின் விலை ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், கோவை மாநகர பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு ஆட்டின் விலை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது. குறைந்த பட்சம் இந்த 3 நாட்களில் ரூ. 5 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.

கோவை உக்கடம் போத்தனூர் கரும்புக்கடை கோட்டைமேடு பொன் விழா நகர் போன்ற பகுதிகளில் ஆடு வியாபாரம் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் செம்பட்டி, மதுரை, திண்டுக்கல், பல்லடம் போன்ற சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து ஆடு வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.

ஆட்டுக்குத் தேவையான புல் கேரளா பாலக்காடு மாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்டன. இந்த புல்லின் விலை ஒரு கட்டு ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று கூறினர்

Updated On: 26 Jun 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்